புதுதில்லி, ஆக.3- மத்திய ஜலசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மினரல் வாட்டர் நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மினரல் வாட்டர் ஆலை களில், 18 சதவீத ஆலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. தமி ழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கு இதுவும் ஒரு கார ணம் என்று கூறப்படுகிறது.